கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம்


வெளிநாட்டில் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலித்து வந்த தமிழர் அவரை கொல்ல முயன்றதோடு சொல்ல முடியாத வகையில் சித்திரவதை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பார்த்திபன் மணியம் (30) என்ற இளைஞர் தன்னுடன் வேலை செய்து வந்த 38 வயதான பெண் ஒருவரை டேட் செய்துள்ளார்.

அந்த பெண்ணை 2 முதல் 3 ஆண்டுகள் வரை டேட் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூரில் அப்பெண்ணின் உறவினர் தங்கி இருந்த வீட்டில் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 23ஆம் திகதி வரை ஒன்றாக இருந்துள்ளனர். அன்றைய தினம் தனது நண்பர்களுடன் பார்த்திபன் மது குடித்துள்ளார்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம்

அப்போதே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஃபோனில் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்ததும், பார்த்திபன் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், அப்பெண்ணைத் மோசமான வார்த்தைகளாலும் திட்டி உள்ளார்.

பிரச்சினையைத் தீர்க்க அப்பெண்ணின் உறவினர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது பார்த்திபன் தனது காதலியை அறைந்துள்ளார். உறவினர் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து பார்த்திபன் தனது காதலியின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து பெண்ணின் உறவினர் பொலிசில் கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி 28இல் பார்த்திபன் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

இருப்பினும், மீண்டும் திரும்பி வந்துள்ளார். அந்த பெண் பார்த்திபனை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்துள்ளான். அவளது போனை பிடுங்கிய அவர், அப்பெண்ணின் முகத்திலேயே தாக்கி உள்ளார். மேலும், அப்பெண்ணை நோக்கி கத்தியைக் காட்டி, “கண்டிப்பாகக் கொன்றுவிடுவேன்” என்று தமிழில் மிரட்டி உள்ளார்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம்

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கத்தரிக்கோலைக் காட்டி அவளைக் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். மேலும் போனை உடைத்து சிம் கார்டை வாயில் போட்டு விழுங்கி அவரின் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாக மீண்டும் கைதான பார்த்திபன் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி, அவளைத் தொடர்பு கொண்டு ஆடைகளை திருப்பித் தருமாறு பார்த்திபன் கேட்டுள்ளான். துணிகளை வாங்க கார் பார்க்கிங்கிற்கு வரச் செல்லியுள்ளான். அங்கே அப்பெண்ணைக் கொல்லப் போவதாக மீண்டும் மிரட்டி உள்ளான்

இதையடுத்து மது பாட்டிலைக் குடித்துவிட்டு, அதை உடைத்து கூர்மையான பகுதியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளான். பெண்ணை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளான்.

இந்த சமயத்தில் அந்த பகுதியில் பொலிசார் சென்ற நிலையில் பார்த்திபனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது, இந்த நிலையில், காதலியை மிரட்டியதற்காக பார்த்திபனுக்கு 7 மாதங்கள் மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.