பிரேசிலின் பியாவுய் மாகாணத்தில் உள்ள கொரென்டே நகரத்தில் குரங்கு ஒன்று பெரிய கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது அந்த குரங்கு தனது உயரமுள்ள கத்தியை சுவற்றில் தேய்த்து தீட்டி கூர்மையாக்குவதுடன், அதனை ஒரு ரவுடியை போல கைகளில் வைத்து சுழற்றிக்கொண்டிருந்த காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.