கனேடிய தங்கச்சுரங்கத்தில் 30,000 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தபட்ட மாமத் வகை யானைக்குட்டியின் முழு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வடக்கே Yukon பகுதியில் க்ளோண்டிக் (Klondike) தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்த அரிய ‘மம்மியை’ கண்டுபிடித்தனர்.
உள்ளூர் மக்களான Tr’ondek Hwech’in First Nation இன் உறுப்பினர்கள் அந்த மாமத் குட்டிக்கு Nun cho ga என்று பெயரிட்டனர், அதாவது “பெரிய குழந்தை விலங்கு” என்று அதற்கு பொருள்.
குட்டி மாமத், அதன் தோலையும் முடியையும் தக்க வைத்துக் கொண்டது, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நம்பமுடியாத மம்மி செய்யப்பட்ட அழகளான பனியுக விலங்குகளில் இதுவும் ஒன்று என்று பழங்காலவியல் நிபுணர் கிராண்ட் ஜாசுலா (Grant Zazula) கூறினார்.
இந்த பெண் மாமத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு தெற்கே உள்ள பெர்மாஃப்ரோஸ்ட் வழியாக அகழ்வாராய்ச்சியின் போது குழந்தை மாமத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
30,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கம்பளி மாமத்கள், காட்டு குதிரைகள், குகை சிங்கங்கள் மற்றும் ராட்சத புல்வெளி காட்டெருமைகளுடன் சுற்றித் திரிந்தததாக கூறப்படுகிறது.
The most incredible thing about Nun cho ga is the preservation…toe nails, hide intact, hair, trunk, intestines… pic.twitter.com/A8sY0ztsNF
— Prof Dan Shugar (@WaterSHEDLab) June 24, 2022
இந்த கண்டுபிடிப்பு வட அமெரிக்காவில் காணப்படும் முதல் முழுமையான மற்றும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட மம்மிஃபைட் (woolly mammoth) மாமத் என்று கூறப்படுகிறது.
1948-ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட்புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் Effie என்ற பெயருடைய பாதி மாமத் குட்டி கண்டுபிடிக்கப்பட்டது.