அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவுக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான அமைப்புகள் மற்றும் சமூக சேவையாளர்கள் இந்த முடிவை பழமைவாத முடிவு என எதிர்க்கின்றனர்.
தெருக்களில் மக்கள் போராட்டம்
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த முடிவு அமெரிக்கர்களின் வாழ்க்கையை பெரிது பாதிக்கும் என்றும், நாட்டின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில் கருக்கலைப்பை முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Roe Vs Wade தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
Roe Vs Wade தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு சட்ட விரோதமாக கருதப்படும். கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அந்நாட்டின் அரசியலமைப்பு வழங்கவில்லை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சில மாநிலங்களில் விலக்கு
அமெரிக்காவில், நாட்டின் அனைத்து மாநிலங்களும் கருக்கலைப்பு தொடர்பாக தங்கள் சொந்த விதிகளை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அமெரிக்காவின் பெரும்பாலான தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்படும் என்றாலும், சில மாநிலங்களில் அதற்கு விலக்கு அளிக்கப்படலாம்.
பெண்களுக்கு 1973ஆம் ஆண்டு கிடைத்த உரிமை
அமெரிக்காவில் கருக்கலைப்பு தொடர்பான தீர்ப்பை 1973 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கின் பெயர் Roe Vs Wade. அந்த வழக்கில், நார்மா மெக்கோர்வி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கர்ப்பமானார் அவர் மூன்றாவது குழந்தையை விரும்பவில்லை. ஃபெடரல் கோர்ட் அவளை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கவில்லை, அதன் பிறகு அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார், நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, கருக்கலைப்புக்கு அனுமதித்தது.
அப்போது, கர்ப்பம் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு பெண்ணின் முடிவாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை கிடைத்தது.
மேலும் படிக்க | நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா
பல நகரங்களிலும் போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள்
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் பலர் கோபமடைந்துள்ளனர். பெண்கள் கருக்கலைப்பு உரிமை கோருகின்றனர். கருக்கலைப்பு உரிமைக்காக நாட்டின் பல நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜோ பிடன் விடுத்த சிறப்பு வேண்டுகோள்
அமெரிக்காவில் கருக்கலைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் கவலை தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டை ஆபத்தான பாதையில் கொண்டு செல்வதாக அவர் கூறியுள்ளார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதாகவும் அவர் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR