குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் சமூக ஆர்வலர் டீஸ்டா செட்டால்வாட்டை மும்பை சாந்தா குரூஸ் காவல் நிலையத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மும்பையில் உள்ள டீஸ்டாவின் வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் தம் வீட்டில் அத்துமீறிப் புகுந்து தாக்கியதாக டீஸ்டா புகார் தெரிவித்துள்ளார்.
டீஸ்டா தொடர்புடைய தொண்டு நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டில் இருந்து பணத்தை பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டீஸ்டா 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தைப் பற்றி தகவல் தந்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த வழக்கில் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.