குறைந்த வட்டியில் வாகன கடன் வாங்க 5 வழிகள்.. என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!

கொரோனாவின் வருகைக்கு பிறகு தனி நபர் வாகன போக்குவரத்து என்பது கணிசமாக உயர்வினைக் கண்டுள்ளது. குறிப்பாக தனி நபர் இடைவெளி, சுகாதாரம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் மக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இருசக்கரம் வாங்கும் போது மொத்தமாக தொகையை கட்டி வாங்குவது என்பது கடினமான காரியமாகும்.

இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!

பலரும் வாகனக் கடன் வாங்கியே வாகனங்களை வாங்குகிறோம். அது இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி. ஆனால் இப்படி கடன் வாங்கும் பலரும் எந்த வங்கி சிறந்தது. குறைந்த வட்டியில் கிடைக்குமா? குறைந்த வட்டியில் கடன் பெற என்ன வழி என்பதை யோசிப்பதே கிடையாது. ஆக வாகனக் கடன்களை குறைந்த வட்டியில் பெற என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.

வட்டியை கவனியுங்கள்

வட்டியை கவனியுங்கள்

அது நீங்கள் கார் வாங்குவதாக இருந்தாலும் சரி, இருசக்கர வாகனம் வாங்குவதாக இருந்தாலும் சரி.

முதலில் வாகன கடன் வாங்க நினைக்கும்போதே எந்த வங்கியில் குறைவான வட்டி, என பலவற்றையும் ஒப்பிட்டு பாருங்கள். வட்டி விகிதம் மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணம், அபராதம் எவ்வளவு, முன் கூட்டியே செலுத்தினால் எவ்வளவு? முன் கூட்டியே கடனை முடித்தால் எவ்வளவு உள்ளிட்ட பலவற்றையும் கவனிக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

பொதுவாக கடன் வாங்க நினைக்கும்போது, அது வாகன கடனாக இருந்தாலும் சரி, எந்தவொரு கடனாக இருந்தாலும், உங்களுடைய சிபில் ஸ்கோர் என்ன என்பதை பாருங்கள். ஒரு வேளை உங்களது சிபில் குறைவாக இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கலாம். ஏனெனில் உங்களது சிபில் குறைவாக இருந்தால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

 

பொதுவாக கிரெடிட் ஸ்கோர் 750 முதல் 900-க்குள் இருந்தால் அது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. ஆக கடன் வாங்கும் முன்பு உங்களது சிபில் ஸ்கோரினை செக் செய்து கொள்ளுங்கள்.

 

ப்ரீ அப்ரூடு கடன்
 

ப்ரீ அப்ரூடு கடன்

உங்களது வங்கி பரிவர்த்தனை சரியாக இருப்பின் வங்கிகள் உங்களுக்கு முன் கூட்டியே ப்ரீ அப்ரூடு கடனை செய்திருப்பார்கள். அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு கட்டணங்கள் விதிக்கப்படாது. மேலும் உங்களுக்கு விரைவில் கடன் கிடைக்கலாம். இதனை உங்களது நெட் பேங்கிங்கிலேயே பார்க்க முடியும். அல்லது வங்கியிலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

பொதுவாக இருசக்கர வாகன கடன் என்றாலே வங்கிக் கடன் மட்டும் அல்ல, நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்கி வருகின்றன. இது இரண்டில் எது சிறந்தது. எங்கு வட்டி குறைவு, எது உங்களுக்கு உகந்தது என்பதையும் யோசியுங்கள். ஆக இதன் மூலம் உங்களது பணத்தினை மிச்சப்படுத்த முடியும்.

 வாகன நிறுவனத்துடன் இணைந்துள்ள கடன்

வாகன நிறுவனத்துடன் இணைந்துள்ள கடன்

இருசக்கர வாகன டீலர்கள் அவர்களே உள்ளூரில் உள்ள நிதி நிறுவனங்கள், பைனான்ஸ்கள், வங்கிளுடன் டைஅப் வைத்திருப்பார்கள். ஆக அதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதையும் யோசிக்க வேண்டும். ஆக அதனையும் அலசி ஆராய்ந்து எது சிறந்ததோ அதனை தேர்ந்தெடுக்கலாம். மொத்தத்தில் உங்களுக்கு எது சிறந்தது? வட்டி குறைவு எங்கு? மற்ற காரணிகள் என்ன? என்பதை தீர்மானித்து அதன் பிறகு கடன் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Be alert! 5 Ways to Buy a Low Interest Auto Loan

Which bank offers low interest rates, operating fees, penalties and upfront payments for car loans? There are many other things to note.

Story first published: Sunday, June 26, 2022, 14:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.