கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அந்நகரில் புதிதாக 39 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்குள்ள 12க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்காவ்வில் தற்போது சுமார் 5 ஆயிரம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
மேலும் அந்த நகரத்தில் வசிக்கும் 6 லட்சம் மக்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.