புதுடில்லி: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் ௨௦௦ ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
மஹாராஷ்டிர மாநிலம், ஜால்னாவை சேர்ந்தவர் அர்ஜுன் கோட்கர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், ஜால்னா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., இவருக்கு சொந்தமாக, ஜால்னாவில் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், ௭,௮௩௮ கோடி ரூபாய் கடன் வாங்கிய கோட்கர், அதை திருப்பி செலுத்தவில்லை. இதில் நடந்த சட்ட விரோத பணபரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சர்க்கரை ஆலைக்கு சொந்தமான ௨௦௦ ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை, அமலாக்கதுறை பறிமுதல் செய்தது.
புதுடில்லி: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் ௨௦௦ ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.