சுவிங்கம் சாப்பிடுவதால், நமது ரத்ததில் இன்சுலின் கலக்கும் விகிதம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்ற ஆய்வில் இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுவிங்கத்தை நாம் வாயால் மென்னும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் இன்சுலினை முறையாக உடைக்க நமது செரிமான மண்டலத்திற்கு உதவியாக இருக்கிறது. நாம் சாப்பிடும் இன்சுலின் மாத்திரைகளை நமது செரிமான மண்டலம்தான் உடைத்து முறையே ரத்திற்கு அனுப்புகிறது.
நமது குடல் எளிதாக எந்த ஒரு என்சைம் ‘enzyme” ரத்தில் கலந்துவிட அனுமதிக்காது. குடலில் இருக்கும் சில சூழலால் உடலுக்கு தேவையான மற்றும் தேவையற்ற விஷயங்களை அது ரத்தில் சேர்வதற்கு அனுமதிக்காது. அப்போது உடல் இதை சரி செய்துகொள்ள சில விஷயங்களை செய்கிறது. உதாரணமாக பி12 என்ற சத்து நமது வாயில் உள்ள எச்சிலில் கலந்துவிடும். ஹாப்டோகோரின் என்ற புரோட்டின் நமது எச்சலில் பி12 கலக்க உதவினாலும். வயிற்றில் இது கலந்துவிடாமல் தடுக்கிறது. இதுவே நமது குடலுக்கு செல்லும்போது, பி12 ரத்ததில் கலந்துவிடுகிறது.
இதுபோல இன்சுலின் நமது ரத்தில் கலந்துவிட, சுவிங்கம் சாப்பிடுவது உதவுகிறது. நாம் சுவிங்கத்தை மெல்லும்போது உருவாகும் புரோட்டின், இன்சுலினை ரத்தில் கலக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.