செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. தொடரில் பங்கேற்க இதுவரை 187 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சீனா தொடரில் இருந்து விலகி உள்ளது.