பலருக்கும் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வும், ஃபிட்னஸ்ஸில் ஈடுபாடும் அதிகரித்ததன் விளைவாக, தெருவெங்கும் பல உடற்பயிற்சி நிலையங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன.
எனவே, நீங்கள் ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.
முதலில் ஜிம்முக்கும் உங்கள் வசிப்பிடத்துக்கும் உள்ள தொலைவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக தூரத்தில் உள்ள ஜிம்மை தேர்வு செய்தால், போக்குவரத்து சிரமங்கள் ஏற்படலாம். அதனாலேயே ஜிம் செல்வது தடைபடலாம். அதனால் அருகில் இருக்கும் ஜிம்மை தேர்வு செய்வது நல்லது.
சில நாள்களுக்குள் உடல் எடையைக் குறைத்து தருகிறோம் என ஃபால்ஸ் ஸ்டேட்மென்ட் (false statement) கொடுத்தால், நன்றாக யோசியுங்கள். ஒவ்வொருவருடைய உடல் அமைப்பு, எடையைப் பொறுத்து அவரின் ஃபிட்னஸ் காலம் மாறும். உறுதிகளை நம்பி ஜிம்மில் சேர வேண்டாம்.
ஒரு மாதத்தில் ஆர்வத்துடன் ஜிம் செல்லும் பலருக்கு அடுத்தடுத்த மாதங்களில் ஆர்வம் குறையலாம். அதனால் ஆண்டுக் கட்டணத்தை (annual package) தவிர்த்து `ஷார்ட் டர்ம் பேக்கேஜ்’ தேர்ந்தெடுப்பது நல்லது.
ஜிம் சென்ற பின் அங்கிருக்கும் அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்தாமல், ஃபிட்னஸ்ஸில் உங்களுக்கென ஓர் இலக்கு செட் செய்து, என்ன தேவையோ அந்தக் கருவிகளில் மட்டும் வொர்க் அவுட் செய்யுங்கள்.
ஃபிட்னஸ்ஸில் உங்களுக்கு என்று ஓர் இலக்கு செட் செய்த பிறகு, அதற்கான கருவிகள் இருக்கும் ஜிம்மாகப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
ஆரம்பநிலையில் ஜிம் செல்பவர்கள் (beginners) முடிந்தளவுக்கு குழுவுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யுங்கள். பலருடன் இணைந்து செய்யும்போது தொடர்ச்சி மிஸ் ஆகாமல் இருக்கும்.
குழுவில் உள்ளவர்களில் உங்கள் உடலமைப்பு/ உங்கள் ஃபிட்னஸ் கோலுடன் ஒத்துப்போகிறவர்கள், நீங்கள் இணைந்து உடற்பயிற்சி செய்ய ஒரு நல்ல துணையாக இருப்பார்கள்.