ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!

வங்கி சேவைகளில் பெரும்பாலும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் சேவைகளாக மாறிய நிலையில் வங்கிகளின் தேவை மக்கள் மத்தியில் பெரும்பாலும் குறைந்த நிலையிலும், சில முக்கியமான சேவைகளுக்கு வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தாலேயே இன்றளவும் பல வங்கிகள் தனது கிளைகளை அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே வங்கிகள் வாரத்தில் இரு சனிக்கிழமை மூடப்பட்டு இருக்கும் நிலையில், பொது விடுமுறை இதற்கிடையில் வந்தால் கூடுதலான நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் ஜூலை மாதம் வங்கிகளுக்குச் சுமார் 14 நாட்கள் இயங்காது என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது. ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்பதால், தமிழ்நாட்டில் எத்தனை நாள் மூடப்பட்டு இருக்கும்..? எப்போது மூடப்பட்டு இருக்கும்..? என்பதை இப்போது பார்ப்போம்.

ரூ.2000 நோட்டுக்களை இனி கேஷ் டெபாசிட் மிஷின் ஏற்று கொள்ளாதா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!

 14 நாட்கள் விடுமுறை

14 நாட்கள் விடுமுறை

ஜூலை மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இருப்பினும், இந்த மாதத்தில் சில வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விடுமுறைகளை மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும், பிராந்தியத்திற்கும் விடுமுறை நாட்கள் மாறுபடுவது இயல்பான ஒன்று. இதன் வாயிலாகவே இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகள் மொத்தமாக இயங்காத நாட்களாக ஜூலை மாதம் 14 நாட்கள் உள்ளன.

விடுமுறை நாட்கள்
 

விடுமுறை நாட்கள்

ஜூலை 1 (ரதா / காங் யாத்ரா): புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 3 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 7 (கார்ச்சி பூஜை): அகர்தலாவில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 9 (இரண்டாவது சனி, பக்ரீத்): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது, இரண்டாவது சனிக்கிழமை தவிர, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 10 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 11 (ஈத்-உல்-அதா): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது

ஜூலை 13 (பானு ஜெயந்தி): காங்டாக்கில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 14 (Beh Dienkhlam): ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 16 (ஹரேலா): டேராடூனில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 17 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 23 (நான்காவது சனிக்கிழமை): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 24 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 26 (கேர் பூஜை): அகர்தலாவில் வங்கிகள் மூடப்படுகிறது.

ஜூலை 31 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் மட்டும் 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை. இதனால் தமிழ்நாட்டில் வங்கி சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Banks will closed for 14 days in July; Check full details

Banks will closed for 14 days in July; Check full details ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!

Story first published: Sunday, June 26, 2022, 15:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.