சென்னை: ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் போட்டிகளை நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-க்குள் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2 முதல் 8-ம் தேதி வரை செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.