எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து விவசாயிகளும், வர்த்தகர்களும் மேலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறியின் அளவு பெருமளவில் குறைந்துள்ளது.
பழவகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சடுதியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உற்பத்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.