தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்ளலாம். அதில் ஒன்று தான் தயிர் சாதம்.
தயிர் சாதம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. தயிர் சாதத்தில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.
தயிர் சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தயிர் ஒரு புரோபயோடிக் பால் பொருள். இது செரிமான மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது
தயிர் சாதத்தை உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரிகிறது.
தயிர் சாதத்தில் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கும் பண்புகள் உள்ளன. தயிர் சாதம் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குவதால், இது சருமத்தில் நேரடியாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமலேயே சாப்பிடலாம். ஆகவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இந்த சாதம் மிகவும் நல்லது.
இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தயிர் சாதம். ஒரு சிலர் இது பாலில் இருந்து வருவதினால் இதிலும் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்று எண்ணி உணவுகளில் தவிர்ப்பார்கள், ஆனால் இதில் இருக்கும் அனைத்துமே நல்ல கொழுப்பு என்பதால் இது உங்கள் உடல் எடையை அதிகரிக்காது.
தயிர் சாதம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.