இந்தியாவில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை முழுவதும் இருந்த கத்தை கத்தையான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன. இதன்பேரில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது 100 ரூபாய் நோட்டுகள் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வரை படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த பணத்தை எண்ணி முடிக்க பல மணி நேரம் ஆனது, இதோடு தங்கம், சொகுசு கார்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதாவது 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு குறித்த சரியான புள்ளிவிவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கணக்கிட்டு வருகின்றனர்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.