சமூக ஊடகங்களின் காலத்தில், அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நமது மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் பழக்கம், அரசியல் புரிதல் இருந்தால் போதும் நீங்களும் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆகலாம். ஆனால், நாகரிகமான மொழியில் நகைச்சுவையாக உருவாக்கப்படும் அரசியல் மீம்ஸ்களே கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். இன்று கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
கடந்த 2 வாரங்களாக அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மோதல்தான் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களின் கச்சாவாக இருந்து வருகிறது.
மயக்குநன் என்ற ட்விட்டர் பயனர், “அதிமுகவில் நடப்பதைக் கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம்” என்று சி.வி.சண்முகம் கூறியதற்கு, “யாருப்பா அது… பொதுக்குழு சம்பந்தமா உயர் நீதிமன்ற உத்தரவைக் கேட்டு ஓபிஎஸ் வீட்டு முன்னால பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் கொடுத்து கொண்டாடியது..?!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “உலகம் இருக்கும் வரை காங்கிரஸ் இருக்கும்!” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதற்கு, “காங்கிரஸ் இருக்கும் வரை கோஷ்டிகள் இருக்கும்… அப்படித்தானே..?!” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“’கூட்டுத் தலைமை’தான் அதிமுகவின் வளர்ச்சிக்கு தேவை என்பதுதான் ஓபிஎஸ் கருத்து!” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதற்கு, “அப்ப… ‘குட்’ தலைமை தேவை இல்லையா..?!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “அதிமுகவில் ‘நடப்பதைக்’ கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம்” என்று சி.வி.சண்முகம் கூறியதற்கு, “’தவழ்வதைக்’ கண்டாதான் அவங்க சந்தோஷப்படுவாங்க தெய்வமே..!” என்று கலாய்த்துள்ளார்.
“மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது!” என்று பிரதமர் மோடி கூறியதற்கு, “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு எக்கச்சக்கமா அதிகரிச்சுட்டு போறதைப் பார்த்தாலே தெரியுது ஜீ..?!” என்று மயக்குநன் கிண்டல் செய்துள்ளார்.
“நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, இபிஎஸ் பக்கமும் இல்லை!” அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “சின்னம்மா பக்கம்னு சிம்பாலிக்கா சொல்றாரோ..?!” என்று மயக்குநன் மீம்ஸ் மூலம் கிண்டலாக கேட்டுள்ளார்.
“ஜனநாயகத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் களம் இறங்க வேண்டும்!” மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதற்கு, “மொதல்ல… காங்கிரஸைக் காப்பாத்த களம் இறங்குங்க தலைவரே..!” என்று மயக்குநன் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“ஓபிஎஸ்ஸை ‘ஓரம் கட்டும்’ எண்ணம் இல்லை!” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “’கட்டம்’ கட்டும் எண்ணம் மட்டும்தான் இருக்கும் போல..?!” என்று மயக்குநன் கலாய்த்துள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “எடப்பாடி ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஏங்குகின்றனர்!” என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதற்கு, “கமலாலய மக்கள்தானே..?” கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நடக்கும் மோதலைப் பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக சி.வி.சண்முகம் கூறியது குறித்து, கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “நீங்கள் அடிச்சுக்கிறதுக்கு.. அவர ஏன்டா இழுக்குறீங்க…” என்று சிவகார்த்திக்கேயன் – சூரி மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
இந்திய கால்ந்து அணியில் ஜோதிடரை சேர்த்தது குறித்து, கட்டனூர் சேக், “இந்திய கால்பந்து கூட்டமைப்புல 16 லட்சம் சம்பளத்துல புதுசா ஒருத்தருக்கு பதவி குடுத்திருக்காங்க மாமா..
சூப்பர் மாப்ள..
௭ன்ன பதவி மாப்ள.. கோட்ச்சா..?
கோட்ச்.. இல்ல மாமா.. ஜோதிடர் மாமா.. ஜோதிடர்..” கலாய்த்துள்ளார்.
சரவணன்.M “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு தமிழ்நாடு முழுவதும் பல மடங்கு உயர்ந்துள்ளது”
- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.
மீம்ஸ்களை எல்லாம் பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது..!” என்று கூறியுள்ளார்.
வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “கட்சியை வளர்க்க ஓ.பி.எஸ் தமிழகமெங்கும் பயணம்.
கல்யாணமே ஆகாத 90ஸ் கிட்ஸ் ஹனிமூனுக்கு ஊட்டி போறதா சொன்னானாம்.” என்று கலாய்த்துள்ளார்.
“ரெண்டு பேரும் நல்லவங்க ரெண்டு பேரும் பச்சை தமிழர்கள் அதனால ரெண்டு (ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்) பேரையும் சப்போர்ட் பண்ணுறேன்” என்று சீமான் கூறுவதாக ஜால்ரா காக்கா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர் மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“