கடந்த சில நாள்களாகவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும், `இந்தியாவின் பொருளாதாரம் சரியாக இல்லை, இளைஞர்கள் வேலையில்லாமால் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்!’ என கோரிக்கையும் விடுத்து வருகிறார்
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திசை திருப்பும் அறிவியலில் பிரதமர் மோடி தேர்ந்தவராக இருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்க உயர்வு, எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு சரிவு என பேரழிவுகளை அவரால் மறைக்க முடியவில்லை. இந்திய மக்கள் பல்வேறு பிரச்னைகளில் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறார்” எனப் பதிவிட்டிருக்கிறார் .