பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் பேன் இந்தியா காலத்தின் புதிய படமான பத்தானின் அசையும் போஸ்டரை வெளியிட்டார்.
1992 ஆம் ஆண்டில் தீவானா படத்தில் திவ்யபாரதிக்கு ஜோடியாக நடித்த ஷாருக்கான் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தில் காஜோலுடன் நடித்தார்.
அந்தப் படம் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் 22 ஆண்டுகளுக்கு ஓடியது. ஷாருக்கானுக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்