திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 35 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கை அகதிகள் பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருப்பதாகவும், தங்களை உடனடியாக விடுதலைச் செய்து, தங்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வலியுறுத்தியும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறப்பு முகாமில் உள்ளவர் ஒருவர் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுவதாவது,