முடி ரொம்ப சிக்கா இருக்கா, டிரையா இருக்கா ? என்ன பன்றதுனு உங்களுக்கு தெரியலையா? அப்போ நீங்கதான் இந்த ஹேர் பேக்கை முதலில் டிரை பன்னனும். பொதுவாக ஹேர் பேக் என்றால் நமக்கு தெரியாத அயல் நாட்டு பொருட்களை வைத்துதான் செய்வார்கள். இதில் பல பொருட்கள் நமது ஊரில் கிடைக்குமா என்றுகூட தெரியாது. ஆனால் இந்த ஹேர் பேக் அப்படி அல்ல. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த ஹேர் பேக்கை செய்ய முடியும்.
இதற்கு தேவையானது வாழைப்பழம். அதுவும் நன்கு பழுத்த வாழைப்பழம். அந்த வாழைப்பழம் நாம் சாப்பிடும் அளவைவிட அதிகமாக பழுத்திருக்க வேண்டும். அந்த வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். இரண்டை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துகொள்ளவும்.
இந்த ஹேர் பேக்கை தலை உச்சிலிருந்து முடி முழுவதும் தேய்க்க வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை தண்ணீரில் ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். குறைந்த அளவில் ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே நன்றாக மாற்றம் தெரியும் . சில்கியான தலைமுடி உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் இந்த ஹேர் பேக்கை தயார் செய்த உடனே பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜில் வைத்து இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த கூடாது.