கன்னியாகுமரி: தாழ்குடியில் இருந்து நாகர்கோயிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் சுமார் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.