திருத்தணி: நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என சசிகலா பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.