ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் உங்கள் மூளையின் சிந்திக்கும் திறனுக்கும் சவால் விடக் கூடியவை. இந்த படம் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால்விடுகிறது. இங்கே பாறைகளில் ஒரு விலங்கு மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று கண்டுபிடியுங்கள்.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்படுகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரஸியத்தால் அது ஒரு அடிக்ஷனாக மாறி வருகிறது. நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்க்க முயற்சி செய்து பாருங்கள். ஆப்படிகல் இல்யூஷன் படங்களால் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், நீங்கள் குழப்பத்தில் மூழ்கியிருக்கும்போது, இறுதியில் விடையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், ஆளுமையை வெளிப்படுத்துபவையாக இருப்பதால் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை இல்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் பார்வையாளர்களை ஏமாற்றக்கூடியவை, இரண்டாவது பார்வையில் குழப்பக்கூடியது. கூர்மையாக உற்று கவனிக்கும்போதுதான் விடை கிடைக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், முதல் பார்வையில் உங்களை ஏமாற்றக்கூடியது. இயற்கை பல உயிரினங்களை வியக்கும் வைக்கும் அளவில் பரிணாமம் அடையச் செய்திருக்கிறது. பாறைகள் நிறைந்துள்ள இந்த படத்தில், ஒரு விலங்கு மறைந்திருக்கிறது அது என்ன விலங்கு என்று கண்டுபிடியுங்கள் என்பதே உங்கள் கூர்மையான பார்வைத்திறனுக்கான சவால்.
இந்த புகைப்படம் ஒரு முன்னணி புகைப்படக் கலைஞர் ஆர்ட் வுல்ஃபின் பதிவு செய்தது. தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இது சிங்கங்கள், வரிக்குதிரைகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் பலவற்றின் தாயகமாகும். இது ஆர்ட் வுல்ஃப்-க்கு விருமானதாக மாறியது.
முதல் பார்வையில் இந்தப் படங்களை அணுகுவது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த படங்களில் சில விலங்குகளின் உருவம் மறைந்திருக்கும். அது மிகவும் நுட்பமாக இருக்கும். சில விலங்குகளின் ரோமங்கள் அல்லது தோல், சுற்றுச்சூழலின் நிறங்களுக்கு ஏற்ப அதே வண்ணத்தில் இருக்கும். அதனால், அந்த விலங்கு அங்கே இருப்பது மேலோட்டமான பார்வைக்கு தெரியாது. இந்த படமும் அப்படித்தான். உங்கள் முதல் பார்வைக்கு கற்கள், பாறைகள் நிறைந்த இந்த படத்தில் இதில் மறைந்திருக்கும் விலங்கு தெரியாது. ஆனால், சற்று உற்று கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படத்தில் பாறைகளுக்கு இடையே ஒரு விலங்கு மறைந்திருக்கிறது. அது எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்கான விடையைத் தருகிறோம்.
இந்த படத்தின் வலது பக்கம் கீழ் பகுதியில், பாறைகளுக்கு இடையே ஒரு முயல் இருப்பதைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“