புதுடில்லி: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்றும், அவர் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரால் இந்த பேரழிவுகளை என்றும் மறைக்க முடியாது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78. எல்ஐசி., -ன் மதிப்பு 17 பில்லியன் டாலர் குறைந்து போனது. மொத்த வியாபார விலை பணவீக்கம் 30 வருடங்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் என்றும் இல்லாத வகையில் உயர்வு. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய டி.எச்.எப்.எல் வங்கியில் மோசடி நடந்துள்ளது.
மக்கள் இங்கு தவித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
புதுடில்லி: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்றும், அவர் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.