சிவமொக்கா;
குமாரசாமி பேட்டி
முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமி சிவமொக்காவுக்கு ஹெலிகாப்டர் மூலம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருகிறது. அங்கு பா.ஜனதா ஆபரேஷன் தாமரையில் ஈடுபட்டுள்ளது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன. கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சி பிடித்தனர். இதைதொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்த்தனர்.
ஓய்வு எடுப்பார்கள்
தற்போது மராட்டியத்தில் ஆட்சியை கலைக்க முயற்சித்து வருகின்றனர். நாட்டில் தங்களை தவிர மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்க கூடாது என்று பா.ஜனதாவினர் விரும்புகின்றனர். இதற்கு பதிலாக அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தாமே ஆட்சியில் இருக்கும்படி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கொள்ளட்டும்.
இதனால் எதிர்க்கட்சிகளுக்கு நாட்டில் வேலை இருக்காது. இதன்காரணமாக எதிர்க்கட்சியினர் ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.