தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா தலைமை மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி, இரவு மருத்துவர் நியமனம் ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றிரவு இந்த மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால் பிரசவத்திற்கு வந்த பெண் ஒருவருக்கு பிரசவ அறையில் யுபிஎஸ் வெளிச்சத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
காலில் வெட்டுப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.