ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல நாடுகளும், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன. இது சப்ளை சங்கிலியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது உலகளவில் ஏற்கனவே பணவீக்கத்தினை மோசமாக அதிகரித்துள்ளது. பல அத்தியாவசிய பொருட்கள் என பலவற்றின் விலையையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை, சமையல் எண்ணெய் விலை, கோதுமை, பல உலோகங்கள் என பலவற்றின் விலையும் வரலாறு காணாத அளவினை எட்டியுள்ளது.
பசியில் தள்ளலாம்
இதற்கிடையில் ஏற்கனவே சமானிய மக்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது மேற்கொண்டு 40 – 50 மில்லியன் மக்களை பசியில் தள்ளலாம். மக்களை வறுமை நிலைக்கு தள்ளலாம் என அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை ஏற்படலாம்
இது ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவ்விரு நாடுகளிலும் உற்பத்தியும் பாதிக்கபப்ட்டுள்ளது. குறிப்பாக உக்ரைனில் கோதுமை உற்பத்தியானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் பலவும் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
கொரோனாவால் வறுமை
முன்னதாக சர்வதேச அளவில் கொரோனா பெருந்தோற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் முடங்கின. இது பல லட்சம் பேரின் வாழ்வாதரத்தினை முடக்கியது. பல லட்சம் பேர் வேலையை இழந்து அத்தியாவசிய தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பல லட்சம் பேர் அப்போதே வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வறுமையில் தள்ளலாம்
இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் என்பது உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இது ரெசசனுக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பே பலரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சனையானது இன்னும் எத்தனை கோடி மக்களை வறுமை நிலைக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கும் திறன் சரிவு
கொரோனா காலத்தில் ஆவது பணக்காரர்கள் மேற்கொண்டு பணக்காரர்களாகவும், ஏழ்மையில் உள்ள மக்கள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதாகவும் ஆய்வுகள் கூறின. ஆனால் இந்த பணவீக்க பிரச்சனை என்பது அனைத்து தரப்பு மக்களின் செலவுகளையும் அதிகரித்துள்ளது. இது மக்களின் வாங்கும் திறனையும் பாதித்துள்ளது. மொத்தத்தில் பணவீக்க அதிகரிப்பினால் தேவை என்பது குறைந்து வருவதையும் தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
Russia ukraine issue to cast 40 – 50 million people into hunger
Amid the conflict between Russia and Ukraine, many countries have imposed sanctions on Russia. This has had a major impact on the supply chain. Studies show that it can starve 40-50 million people.