லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மேற்கொண்ட குற்றங்கள் குறித்த முழு பின்னணி வெளியாகியுள்ளது.
மேற்கு லண்டனை சேர்ந்தவர் மோங்கோன் தோப்வான் (54). இவர் இருவேறு சமயங்களில் தன்னுடைய மசாஜ் பார்லருக்கு வரும் இரண்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
அதன்படி கடந்த 2020 நவம்பர் மாதம் 1ஆம் திகதி மசாஜ் செய்ய வந்த 20களில் உள்ள பெண்ணிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்போது கைதான தோப்வான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் கடந்தாண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி மீண்டும் மசாஜ் செய்ய வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.
இதையடுத்து அதற்கு அடுத்தநாள் தோப்வான் கைது செய்யப்பட்டார்.
Met Police, Google
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி நடாலி விட் கூறுகையில், இதேபோன்ற தாக்குதலுக்கு ஆளான எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இரண்டு பெண்களின் அளப்பரிய தைரியத்தையும் துணிச்சலையும் நான் பாராட்டுகிறேன்.
ஏனெனில் அவரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் குற்றவாளிக்கு நாங்கள் தண்டனை வாங்கி தந்திருக்க முடியாது.
தோப்வான் மிகவும் ஆபத்தான குற்றவாளி, அவருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. iஇது வேறு யாரையும் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களுக்கு உட்படுத்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளது என கூறியுள்ளார்.
Getty/ iStockphoto