தமிழகத்தில் பத்தில் ஒரு தெருவோர கடை வியாபாரிகள், ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் அப்படியே பயன்படுத்துவது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. போலவே ஐந்தில் ஒருவர், உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை பயன்படுத்தப்படாத எண்ணெய் உடன் பயன்படுத்துகிறார் என்பதும், தெரியவந்துள்ளது.
சாலையோர உணவுக் கடைகளில் பத்தில் ஒரு கடையில் சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 13 மாவட்டங்களில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் சாலையோர உணவகங்களில் 76 சதவிகிதம் அளவிற்கு பாமாயில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
போலவே நிலக்கடலை எண்ணெய் 12.5%., வனஸ்பதி எண்ணெய் 9.6%, நல்லெண்ணெய் 1.7% பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு எண்ணெய்யை மட்டும் பயன்படுத்த குறைந்த விலையில் அவை கிடைப்பதுதான் 39.6% காரணமென்றும், சுவை (36.6), தரம் (16.3%) போன்றவையே காரணமென்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக புதிய எண்ணெயுடன், ஒரு சிலர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை கலப்படம் செய்வதும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: TOISource : WWW.PUTHIYATHALAIMURAI.COM