கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில், கார் ஒன்றிலிருந்து ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி சிறுவன் ஒருவன் பணத்தை திருட முயல்வது போன்ற வோடியோ ஒன்று வைரல் ஆகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீட வரிசையில் காத்திருக்காமல், நிற்காமல் செல்லும் வகையில் FASTag சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு முதல் இந்த FASTag சேவை எல்லா வாகனங்களிலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் சில நேரங்களில் கூடுதல் கட்டணம் அல்லது இரண்டு முறை பணம் பிடித்தம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது ஸ்டார்ட் வாட்ச் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்வது போல வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
FASTag மூலம் பேமெண்ட்.. ஐடிஎப்சி – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் புதிய சேவை அறிமுகம்..!
சிக்னல்கள்
வட மாநிலங்களில், குறிப்பாக மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வாகனங்கள் சாலையில் உள்ள சிக்னலில் நிற்கும் போது, அங்கு சில சிறுவர்கள் வாகனத்தின் கண்ணாடியைத் துடைப்பதும், அதற்காகக் காசு கொடுக்குமாறு கேட்பதும் வழக்கம்.
எப்படி?
இப்படி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், சிறுவன் ஒருவன் கார் கண்ணாடி ஒன்றை துடைக்கிறான். அப்போது அவனது கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்ச் ஒன்று உள்ளது. அது FASTag அருகில் செல்லும் போது FASTag சாதனத்தில் விளக்கு எரிகிறது.
சந்தேகம்
அதை பார்த்து சந்தேகம் அடையும் அந்த காரில் உள்ளவர்கள், அந்த சிறுவனைக் கேட்கும் போது அவன் பயந்து ஓடுகிறார். ஆனால் அந்த சிறுவனை பிடிக்க முடியவில்லை என்பது போல அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் FASTag பற்றி பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி வருகிறது.
இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில் (NPCI)
இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில், FASTag சேவையில் இப்படி மோசடி செய்ய முடியாது. அந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
FASTag சேவை சுங்கச்சாவடிகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயங்கும். அது மட்டுமல்லாமல் சுங்கச்சாவடி செவை வழங்கும் நிறுவனங்களால் மட்டுமே FASTag மூலம் பணம் பிடித்தம் செய்ய முடியும். பிற நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
பேடிஎம்
FASTag சேவை வழங்கும் பேடிஎம் நிறுவனமும் இந்த வீடியோ போலி என டிவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
A video is spreading misinformation about Paytm FASTag that incorrectly shows a smartwatch scanning FASTag. As per NETC guidelines, FASTag payments can be initiated only by authorised merchants, onboarded after multiple rounds of testing. Paytm FASTag is completely safe & secure. pic.twitter.com/BmXhq07HrS
— Paytm (@Paytm) June 25, 2022
FASTag Fraud Claim Video Is Fake, NPCI Clarifies
FASTag Fraud Claim Video Is Fake, NPCI Clarifies| FASTag-ல் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி பணத்தை திருட முடியுமா?