Samsung 200MP Camera Sensor: ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சக்திவாய்ந்த கேமராக்கள் கொண்ட கைபேசிகளை அறிமுகப்படுத்துகின்றன. தற்போது 64 மெகாபிக்சல், 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன.
இந்த சூழலில், சாம்சங் புதிய 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் பல புதுப்பிப்புகளுடன் 200 மெகாபிக்சல் ISOCELL HP3 மொபைல் கேமரா சென்சாரை டெக் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது.
Read More:
Cryptocurrency: சுமார் ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள் – பெரும் கிரிப்டோகரன்சி மோசடி அம்பலம்!
ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால், விரைவில் டிஎஸ்எல்ஆர் போன்ற தெளிவுதிறன் கொண்ட மொபைல் கேமராக்கள் அறிமுகம் ஆகும்.
பல நிறுவனங்கள் போன்களில் ஒரே மாதிரியான கேமராவை வழங்குவதாகவும் கூறுகின்றன. ஆனால், DSLR போன்ற சுத்தமான மற்றும் தெளிவான தரத்திற்கு நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
சாம்சங் 200 மெகாபிக்சல் கேமரா சென்சார்
சாம்சங்கின் புதிய சென்சார் ISOCELL HP3, பழைய ISOCELL HP1 ஐ விட பல வழிகளில் சிறந்தது. ISOCELL HP1 இல் நீங்கள் 0.64μm பிக்சல்களைப் பெறுவீர்கள். HP3 இல், அளவு இன்னும் சிறியதாக இருந்தது. இது 0.56μm பிக்சல்களைப் பெறும்.
Read More:
Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!
எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், சமீபத்திய கேமரா சென்சாரில் முந்தைய சென்சார்களை விட அதிக தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், நிறுவனம் Epic Resolution Pro என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் மூலம் தொழில்முறை அளவிலான உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை கிளிக் செய்யலாம். பின்னர் இதை எடிட்டிங் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.
புதிய சென்சார் அம்சங்கள்
புதிய ISOCELL HP3 ஆனது பழைய சென்சார் விட 12 விழுக்காடு சிறிய பிக்சல் அளவைப் பெறுகிறது. மேலும், புதிய சென்சாரின் தொகுதி பரப்பளவு குறைவாக இருக்கும். சாம்சங்கின் புதிய கேமரா சென்சார் 8K ரெசல்யூஷன் வீடியோவை நொடிக்கு 30 பிரேம்கள் மற்றும் 4K ரெசல்யூஷன் வீடியோவை 120fps இல் பதிவு செய்யும்.
Read More:
POCO F4 5G Launch: புதிய போக்கோ எஃப்4 5ஜி போன்; அறிமுக சலுகைகள் மற்றும் அம்சங்கள்!
மேலும், சாம்சங் சென்சாரில் டெட்ரா பிக்சல் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஸ்மார்ட்போனின் கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றாக இணைத்து, குறைந்த வெளிச்சத்திலும் நல்ல புகைப்படங்களை உருவாக்குகிறது.
புதிய கேமரா சென்சார் 16 பிக்சல்கள் வரை சேர்க்கிறது. அதாவது இரவு புகைப்படம் எடுப்பதில், இந்த சென்சார் அதிக புத்திசாலித்தனமான ஒளி மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இருப்பினும் எந்த சாம்சங் போனில் இந்த சென்சார் கொடுக்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.