வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானத் துறையில் மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் சேரும் வகையில், ‘அக்னிபத்’ என்ற திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஜூன் 24ம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் ரயில் எரிப்பு சம்பவமும் அரங்கேறியது. ஆனால், விண்ணப்ப பதிவு துவங்கியது முதல் இளைஞர்கள் ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். இந்திய விமானத்துறையில் அக்னிபத் திட்டத்தின் மூலம் மூன்று நாளில் 56,960 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், இளைஞர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 5ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தாலும், உண்மையில் மூன்றே நாளில் இவ்வளவு விண்ணப்பம் பதிவாகி இருப்பது இத்திட்டத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு அளிப்பதையே காட்டுகிறது.
Advertisement