அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை உத்தரவு: பெண்களுக்காக கூகுள் எடுத்த அதிரடி முடிவு!

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருக்கலைப்பு தடை உத்தரவை அடுத்து கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு அமெரிக்காவில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பெண்கள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..!

கருக்கலைப்பு சட்டம்

கருக்கலைப்பு சட்டம்

கடந்த 1973-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்யும் உரிமை பெண்களுக்கு உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை தற்போது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கருக்கலைப்புச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் அமெரிக்காவில் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி, அமெரிக்க பெண்கள் நல அமைப்புகள் உள்பட பலர் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். மேலும் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்
 

கூகுள்

இந்த நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்த உத்தரவுக்கு பிறகு கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்காக எந்தவித காரணமும் இன்றி விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

கவலை

கவலை

கூகுள் நிறுவனத்தின் மனிதவள தலைவர் ஃபியோனா சிக்கோனி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது ‘அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்த உத்தரவு பெண்கள் மத்தியில் ஆழமான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள். பெண்கள் என சமபங்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு பெண்களின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் தொழில்களில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய கவலைகளை கூகுள் நிறுவனம் பகிர்ந்து கொள்கிறது’ என கூறியுள்ளார்.

இடமாற்றம்

இடமாற்றம்

அதேபோல் கூகுள் நிறுவனத்தின் மற்றொரு முக்கிய அதிகாரி கூறியபோது மெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் எந்தவித வேறு காரணமும் கூறாமல் பெண்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்களுடைய விண்ணப்பம் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பு

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின்செய்தி தொடர்பாளர் கூறியபோது ‘இடமாற்றம் குறித்த நடவடிக்கைகள் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே இருந்தது என்று தெரிவித்தார். கூகுள் மட்டுமின்றி அமெரிக்காவிலுள்ள பல நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் வேறு நாடுகளில் இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Google will allow employees to relocate after USA Supreme Court strikes down abortion rights

Google will allow employees to relocate after US Supreme Court strikes down abortion rights | அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை உத்தரவு: பெண்களுக்காக கூகுள் எடுத்த அதிரடி முடிவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.