அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் விரைவில் ஐபிஎல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்காக, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டரை இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.
அத்துடன், ஹாரி டெக்டர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாராட்டிய ஹார்திக் பாண்டியா, அவருக்கு 22 வயது தான் ஆகிறது, அவருக்கு நான் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறேன், ஒருவேளை இதனால் அவர் இன்னும் அதிகமான சிக்ஸர்களை விளாச வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அடுத்து வரும் ஐபிஎல் ஒப்பந்ததிலும் கையெழுத்திட நான் அவரை வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நீங்கள் போருக்குள் இழுக்கப்படுகிறீர்கள்: ரஷ்யாவின் நட்பு நாட்டிற்கு…ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் மழையின் இடையூறு காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டர் (Harry Tector) வெறும் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என விளாசி 64 ஓட்டங்கள் சேர்த்தார், இதன் மூலம் அயர்லாந்து அணி 12 ஓவர்களுக்கு 109 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.