உலகிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது, இந்தியாவில் மட்டுமே அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களைப் பெற வாய்ப்புகள் இருக்கும் தளம் உள்ளது. இதனாலேயே பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
அந்த வகையில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்திய சந்தையை முக்கிய இலக்காக வைத்து லேவர் ரேஞ்ச், மிட் ரேஞ்ச், அப்பர் ரேஞ்ச் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் போன்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்நிலையில் இந்தப் பண்டிகை காலத்தில் முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்.. அதானி குஜராத்தில் மாஸ்டர் பிளான்..!
ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் வாங்குவோர் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் மிகப்பெரிய தள்ளுபடிகள் உடன் பல முறை தள்ளுபடி விற்பனைச் சலுகைகள் உடன் விற்பனையை அறிவிக்கும் என்று சந்தை கண்காணிப்பாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அதிகப்படியான இருப்பு
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளிடம் பணவீக்கத்தின் திடீர் உயர்வாலும், உலகளவில் மந்தமான தேவை இருந்த காரணத்தாலும் பெரும்பாலான நிறுவனத்திடம் அதிகப்படியான இருப்பு உள்ளது. இதைத் தீர்த்தால் மட்டுமே அடுத்தப் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய முடியும்.
புதிய மாடல்கள்
எற்கனவே அறிமுகமான மாடல்களில் அதிகப்படியான இருப்பு இருக்கும் நிலையில் புதிய போன்களை அறிமுகம் செய்தால் பழைய போன்கள் அப்படியே விற்பனை ஆகாமல் நின்றுவிடும். இதைச் சமாளிக்க இந்தப் பண்டிகை காலத்தில் மொத்த சரக்கு இருப்பையும் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.
பண்டிகை காலம்
இதனால் நடப்பு நிதியாண்டின் 2வது பகுதியில் வரும் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய தள்ளுபடிகள் உடன் பிரம்மாண்ட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு மொத்த சந்தையும் தயாராகியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் புதிய போன்களை வாங்க முடியும். ஆனால் அதற்குக் கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டும்.
கவர்ச்சிகரமான EMI திட்டம்
இதற்கிடையில் இந்திய வாடிக்கையாளர்கள் இந்தப் பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன் வாங்க ஏதுவான சூழ்நிலை உருவாகிக்கொடுக்கும் பொருட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஆகியவை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் சிறப்புச் சலுகை அல்லது கவர்ச்சிகரமான EMI திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரிக் காரா? வேணாம்ப்பா வேணாம்.. ஒதுங்கும் மாருதி சுசூகி.. ஏன் தெரியுமா..?!
Smartphone cos need to clean inventories; This festive season might be big discounts on smartphone
Smartphone cos need to clean inventories; This festive season might be big discounts on smartphone அவரசப்பட்டுப் புது ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க..!