அசைவ உணவில் பலருக்கும் பிடித்த உணவாக ஆட்டிறைச்சி உள்ளது.
இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஆட்டின் மூளையானது அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது.
ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.
ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும்.
ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்கிறது.
ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.
ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது.
பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.