இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுகுறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.nsimg3063098nsimgஇது குறித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.