ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 57.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றாததால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தேர்வு 57.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியிருப்பதாவது:
அபராதம்
இந்த அபராத நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வாடிக்கையாளர்களுடன் வங்கி மேற்கொண்டுள்ள பரிவர்த்தனை மற்றும் ஒப்பந்தத்தில் குறைகள் இருப்பதன் காரணமாகவும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆய்வு அறிக்கை
2020ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்த மேற்பார்வை மதிப்பீடு குறித்து சட்டபூர்வமாக ஆய்வு நடத்தப்பட்டதாகவும் இந்த ஆய்வு அறிக்கை மற்றும் அனைத்து கடித பரிமாற்றங்களை நடத்திய பின்பே இந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதாக கூறியுள்ளது.
ஏடிஎம் கார்டு குளோனிங்
ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணங்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், வங்கியின் ஏடிஎம் கார்டு குளோனிங் சம்பந்தப்பட்ட சில மோசடி நிகழ்வுகளை ரிசர்வ் வங்கிக்கு மூன்று நாட்களுக்குள் புகாரளிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தவறியுள்ளது என்றும் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது,.
நோட்டீஸ்
மேலும் 5 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்குபவர்களின் CRILC-ல் தெரிவிக்க தவறியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை பின்பற்றாத இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு அந்த வங்கிக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது என்றும், வங்கிக்கு அனுப்பட்ட நோட்டீஸ் மற்றும் கூடுதல் வாய்ப்புகளை பரிசீலனை செய்த பின்னரே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
இதனை அடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்ததை அடுத்து ரூபாய் 57.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தனது விளக்க அறிக்கையில் கூறி உள்ளது.
RBI imposes monetary penalty on Indian Overseas Bank for non-compliance
RBI imposes monetary penalty on Indian Overseas Bank for non-compliance | இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.57.50 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?