மேல்மாகாணத்தில் ,கொழும்பு கல்வி வலயத்திலும் ,அதனை அண்மித்த நகரங்களிலும் ,ஏனைய மாகாணங்களில் உள்ள நகர பாடசாலைகளிலும், கடந்த வாரத்தில் போன்றே இன்று ஆரம்பமாகும் இந்த வாரத்திலும் பாடசாலைகளை நடத்துவதில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேபோன்று, இந்த வாரத்திலும் கடந்த வாரத்தில் கிராம பாடசாலைககளை நடத்தியது போன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பட்சத்தில் செய்வாய் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இந்த வாரம்; கொழும்பு நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக்கிய நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளில் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியில் மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாளை 27 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர் தரத்திற்கான ஆய்வு பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமாயின் இதனை இரண்டு வாரங்களின் பின்னர் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு பரீட்சை இரண்டுவாரங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.