உக்ரைன் போரால், ஆற்றலுக்காக பழமையான நிலக்கரி மின் உற்பத்தித் திட்டத்துக்கு மாறும் நாடுகள் பட்டியலில் பிரான்சும் இணைந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினை காரணமாக ரஷ்யாவை ஓரங்கட்டுவதற்காக ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவதை நிறுத்த பல நாடுகள் முடிவு செய்தன.
ஆனால், ரஷ்யாவின் எரிவாயுவுக்கு மாற்றாக எரிபொருள் வேண்டுமே! ஆகவே, அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் நடவைக்கைகளில் நாடுகள் இறங்கியுள்ளன.
ஆற்றலுக்காக கத்தார் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு முதலான விடயங்களை ஜேர்மனி முடிவு செய்துள்ளதுடன், முன்பு மின்சாரம் தயாரிக்கப் பயன்பட்ட அனல் மின் நிலையங்களையும் திறப்பது என முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியைப் போலவே பிரான்சும் அனல் மின் நிலையங்களைத் திறக்க திட்டமிட்டு வருகிறது.
ஆனாலும், பிரான்சின் பெருமளவு மின்சாரம் அணு மின் நிலையங்களிலிருந்துதான் வருகிறது. ஆகவே, அனல் மின் நிலையங்கள் திறக்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே நிலக்கரி உதவியுடன் மின்சாரம் தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.