உக்ரைன் போர் தொடங்கிய பின் முதல் முறையாக அதிபர் புதின் ரஷ்யாவை விட்டு வெளியேறி மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ள பதிவில் அதிபர் புதின், தஜிகிஸ்தான் மற்றும், துர்க்மெனிஸ்தான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்க்மெனிஸ்தான் சுற்றுபயணத்தின் போது அஜர்பைஜான், கஜகஸ்தான், ஈரான், உள்ளிட்ட நாடுகளின் காஸ்பியன் மாநாட்டில் அதிபர் புதின் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாஸ்கோ வரும் இந்தோனேஷியா அதிபருடன், புதின் பேச்சுவர்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.