இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 ஆந்தைகள் மறைந்திருக்கிறது. உங்களுக்கு 30 வினாடிகள்தான் அவகாசம் அதற்குள் அந்த 3 ஆந்தைகளையும் கண்டிபிடிக்க வேண்டும். இதுதான் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால்.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த ஓவியத்தில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிங்க, இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்த்தது என்ன, இதுதான் உங்கள் ஆளுமை என்று வெளியாகிவரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான அடிக்ஷனாகி விட்டது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உண்மையிலேயே ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை மகிழ்வித்து வருகிறது. அவை பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஒருவரின் ஆளுமையையும் குண நலனையும் வெளிப்படுத்துகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு ஒரு எளிமையான சவால். எளிமையான சவால்தான், ஆனால், அது அந்த அளவுக்கு எளிமையானதா என்பது ஐயம்தான்.
ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் மரங்களில் 3 ஆந்தைகள் இருந்துள்ளன. அடர்ந்த மரக்கிளைகளுக்கு இடையே மறைந்துள்ள 3 ஆந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். அதுவும் 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
மரத்தில் மறைந்துள்ள 3 ஆந்தைகளையும் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
முதல் ஆந்தை படத்தின் மேல் வலது மூலையில் அமர்ந்திருக்கிறது. இரண்டாவது ஆந்தை படத்தின் மையத்தில் இரண்டு கிளைகளுக்கு இடையில் அமர்ந்திருக்கிறது. மூன்றாவது மற்றும் இறுதி ஆந்தையைக் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால், நீங்கள் படத்தின் மையத்தில் கவனம் செலுத்தினால், மூன்றாவது ஆந்தையைப் பார்க்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“