உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Supreme Court decision on Maratha quota unfortunate: Uddhav Thackeray
இந்நிலையின் ஜூன் 25 அன்று மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். ஜூன் 27 ஆம் தேதியான இன்றுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று அனல் பறக்க நடைபெற்ற விசாரணையின் டாப் 5 தகவல்கள் இதோ!
1. ஏன் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை?
நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி.பர்டிவாலா அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏன் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுபோன்ற நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடிய வழக்குகள் நிறைய உள்ளதாக உதாரணங்களை முன் வைத்தார்.
Sena vs Sena battle shifts to Supreme Court; Shinde dials MNS chief | Top  updates
2. “மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல்”
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் அச்சுறுத்தல் நீடிப்பதாலும், உகந்த சூழல் இல்லாததாலும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியதாக அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
3. ஜூலை 11 வரை தகுதி நீக்கம் கூடாது
இதைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
SC declines bail plea of man held for objectionable remarks against Uddhav  - The Hindu
4. அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற 38 எம்.எல்.ஏ.க்கள்
இந்த வழக்கு விசாரணையின் போது அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 38 அதிருப்தி எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்று விட்டனர்” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.
5. ஆளுநரை அணுகும் அதிருப்தி முகாம்! அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம்!
மகாராஷ்டிர அரசில் இருந்து வெளியேற கோரி ஆளுநரை அணுக ஷிண்டே தலைமையிலான அதிருப்தி முகாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புள்ளது. ஜூலை 12 க்குள் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.