இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த எண்ணெய் தாங்கி கப்பலின் ஆர்டர் செய்வதில் கடன் கடிதம் விவகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
இந்நிலைமையால் பணத்திற்காக மட்டுமே எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் எரிபொருள் நெருக்கடி மிகவும் பாரதூரமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த எரிபொருள் டேங்கர் வரும் சரியான திகதியை அறிய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.