இந்திய அரசு ஜுலை 1 முதல் பற்பல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அதில் மிக முக்கியமானது ஒரு முறை மட்டும் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் தடை.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு பொருளாக உள்ளது. முந்தைய காலத்தில் ரோடு ஓரங்களில் பசுமையான தாவரங்கள் என இரு புறங்களிலும் இருக்கும். பார்க்கவே கண்ணுக்கும் இதமானதாக இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை.
தற்போது கண்ணுக்கு எட்டியவரை ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்கள் என பார்க்க முடிகிறது.
ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம்.. எச்சரிக்கும் நிபுணர்களின் கணிப்பு..!
அதிகரிக்கும் கழிவுகள்
இது ஆங்காங்கே கலந்து காற்றை மாசுபடுத்துகின்றன. மண்ணிலும் மாசுக்களை ஏற்படுத்துகின்றன. மொத்தத்தில் நாம் உண்ணும் உணவு, குடிக்கும் குடி நீர் என அனைத்திலும் மாசு ஏற்படுத்தும் அபாயம் எழுந்துள்ளது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிகளை மறுசுழற்சியும் செய்ய முடியாத நிலையில், அவற்றின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இது தாமதம் தான்
இதன் தேக்கம் அதிகரிக்க அதிகரிக்க சுற்று சூழலுக்கும் மாசு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏற்கனகே பல நாடுகளும் இதனை அமல்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை தாமதம் எனலாம். இதற்கிடையில் தான் இந்திய அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வெளியேறும் கழிவு?
ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் 14 மில்லியன் டன் கழிவுகள் கடலில் சேருவதாகவும் கூறப்படுகிறது. இது நிலத்தினை மட்டும் அல்ல, நீரினையும் மாசுபடுத்தி வருகின்றது. இவ்வாறு மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சேர்ப்பதில் இருந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இனியும் அதிகரித்தால்?
இந்த நிலையில் தான் வரும் ஜூலை 1 முதல் சிகரெட் பாக்கெட்ஸ், பிளாஸ்டிக் பிளேட்ஸ், கப்ஸ், கிளாசஸ், ஃபோர்க்ஸ், ஸ்பூன்கள், கத்திகள், ஸ்ட்ராக்கள், பிளேடுகள் என பிளாஸ்டிக் கலந்தது என பலவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2019-20ம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளும், 2018-19 ஆம் ஆண்டில் 30.59 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இது இனி இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்திய அரசு தடையும் செய்துள்ளது.
Why india has announced single use plastic ban from july 1 2022?
Government of India will bring in a number of changes from July 1. The most important of these is the single-use plastic barrier.