எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி போன்றவற்றினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இடையில் நடைபெற்றது.
இன்று (27) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (27) இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தெடர்பாகவும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.