ஐடி துறைக்கு காத்திருக்கும் சவாலான காலம்.. எப்படி இந்திய ஐடி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்?

சர்வதேச ஆய்வு நிறுவனமான ஜேபி மார்கனின் CIOs-ன் சமீபத்திய ஆய்வறிக்கையில், ஐடி துறைக்கு செலவிடும் தொகையை 1 – 2% சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நாமினில் வளர்ச்சியாக 5/6 சதவீதமாக CY22/23M ஆண்டில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பணவீக்க மதிப்பானது 6 – 8% ஆக இருக்கும் போது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவில்லையா..விமான துறையில் 3 நாட்களில் 57,000 இளைஞர்கள் விண்ணப்பம்.. !

அமெரொக்காவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது வளர்ச்சியில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

இந்தியாவில் என்ன பாதிப்பு?

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், இந்திய ஐடி நிறுவனங்களாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குறையலாம். அவுட்சோர்ஸிங் பணிகள் குறையலாம். ஐடி துறைக்கு நிறுவனங்கள் செலவிடும் தொகையை குறைக்கலாம். இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 செலவுகளை குறைக்கலாம்

செலவுகளை குறைக்கலாம்

இது குறித்த ஆய்வில் 142 தலைமை தொழில் நுட்ப அதிகாரிகள், அடுத்த 12 – 18 மாதங்களில், அமெரிக்கா/ ஐரோப்பாவில் 30 மற்றும் 31% வளர்ச்சி சரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 39% CIOs-க்கள் நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் ஐடி துறைக்கான செலவினங்களை தாமதப்படுத்தலாம் அல்லது இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவை குறைக்க திட்டம்
 

செலவை குறைக்க திட்டம்

உலகளாவிய நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் அதிகளவிலான ஒப்பந்தளை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக ஐபிஎம், அசென்சர், டெலாய்ட் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ரோ மந்த நிலையின்போது, செலவுகளை குறைக்க நிறுவனங்கள் திட்டமிடலாம் என்பதால், வெளி நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய ஐடி துறையில் பாதிப்பு

இந்திய ஐடி துறையில் பாதிப்பு

மொத்தத்தில் ஐடி துறையானது ரெசசனால் மெதுவான வளர்ச்சிக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ஐடி துறையில் மெதுவான வளர்ச்சிக்கு வித்திடலாம்.

ஏற்கனவே ஜேபி மார்கன் இந்திய ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் தரத்தினை குறைத்துள்ளது. இது மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜேபி மார்கனின் கவலையளிக்கும் மதிப்பீடு

ஜேபி மார்கனின் கவலையளிக்கும் மதிப்பீடு

முதல் பாதியில் மார்ஜினில் தாக்கம் இருக்கலாம் என்ற நிலைக்கு மத்தியில், இரண்டாம் பாதியில் மெதுவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வருவாயில் தாக்கம் இருக்கலாம். தற்போதைய வருவாய் கணிப்புகளுக்கு மத்தியில் எதிர்மறையான கணிப்புகள் வந்து கொண்டுள்ளன. இதற்கிடையில் இந்திய ஐடி துறை பற்றிய கவலையினை எழுப்பியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

As the fear of recession grows in the US, what do Indian IT employees and stakeholders need to know?

Amid growing fears of a recession in the United States, the IT sector is expected to be pushed into slower growth. This could lead to slow growth in the Indian IT sector.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.