ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், தொழிலதிபர் ஆகலாம்: சுகுணா சிக்கன் அழைப்பு

ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கோழிப்பண்ணை வைத்து தொழிலதிபர் ஆகலாம் என சுகுணா சிக்கன் அழைப்பு விடுத்துள்ளது.

கோவையை சேர்ந்த சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் அங்கமான சுகுணா சிக்கன், கோழிக்கறி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவில்லையா..விமான துறையில் 3 நாட்களில் 57,000 இளைஞர்கள் விண்ணப்பம்.. !

இந்நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி புதிதாக கோழிப்பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது.

கோழிப்பண்ணை வர்த்தகம்

கோழிப்பண்ணை வர்த்தகம்

அந்த வகையில் கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்றும் அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம் என்றும் சுகுணா சிக்கன் தெரிவித்துள்ளது.

 சுகுணா சிக்கன்

சுகுணா சிக்கன்

ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிறுவனத்துடன் தொடர்புகொண்டு கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் சுகுணா சிக்கன் தெரிவித்துள்ளது.

பிராய்லர்
 

பிராய்லர்

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் பிராய்லர், லேயர் பார்மிங், குஞ்சு மையம், தீவனம் ஆலை உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ள சுகுணா புட்ஸ் நிறுவனம் கோழிப்பண்ணை விவசாயத்தை நீடித்த நிலையான தன்மையுடன் வளர்க்க முடியும் என நம்புகிறது.

மிஸ்டு கால்

மிஸ்டு கால்

எனவே கோழிப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் 9894398944 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் எந்த வித இடைத்தரகர்கள் பிரச்சனை இல்லாமல் எங்களை நேரடியாக தொடர்பு கொண்டு கோழி பண்ணை வைக்கலாம் என்றும் நாட்டில் கோழிப்பண்ணை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆர்வம் உழைப்பு திறமை

ஆர்வம் உழைப்பு திறமை

கோழிப்பண்ணை வைப்பதற்கு எந்தவிதமான பெரிய முதலீடும் தேவையில்லை என்றும் ஆர்வமும் திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் தொழிலதிபர் ஆவதற்கு சுகுணா சிக்கன் உதவி செய்யும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய வாய்ப்பு

அரிய வாய்ப்பு

எனவே கடின உழைப்பு ஈடுபாடு ஆர்வம் ஆகியவை இருந்தால் சுகுணா சிக்கன் போன்று பல நிறுவனங்கள் சாதாரண மனிதர்களை தொழிலதிபராக்கி வரும் நிலையில் இதுபோன்ற அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Give a missed call and become a poultry farmer says Suguna Chicken

Give a missed call and become a poultry farmer says Suguna Chicken | ஒரே ஒரு மிஸ்டு கால் போதும், தொழிலதிபர் ஆகலாம்: சுகுணா சிக்கன் அழைப்பு

Story first published: Monday, June 27, 2022, 16:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.