கனடாவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Kelowna நகர பொலிசார் இதை உறுதி செய்துள்ளனர். அதன்படி 31 வயதான் செல்சியா கார்ட்னோ என்பவர் கடந்த 14ஆம் திகதி தனது வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய பின்னர் மாயமானார்.
அவரை பொலிசாரும் குடும்பத்தாரும் தேடி வந்த நிலையில் வெள்ளம் பாய்ந்து சென்ற தண்ணீர் நிறைந்திருந்த இடத்தில் இருந்து சடலமாக நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Kelowna RCMP
செல்சியா காணாமல் போன நேரத்தில், ஆபத்தான உயர் நீர் நிலைகள் மற்றும் வெள்ளம் காரணமாக நகரம் அவசரநிலைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
தண்ணீர் நிறைந்திருந்த வயல்பரப்பில் செல்சியாவின் சடலம் இருந்துள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடைபெறவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செல்சியாவின் நாய் கண்டுபிடிக்கப்படவில்லை, அது நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.